மோட்டார் சைக்கிள்கள் திருடிய 3 பேர் கைது

மோட்டார் சைக்கிள்கள் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 வண்டிகளை பறிமுதல் செய்தனர்.;

Update:2023-10-15 23:48 IST

புதுச்சேரி

மோட்டார் சைக்கிள்கள் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 வண்டிகளை பறிமுதல் செய்தனர்.

வாகன சோதனை

லாஸ்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்சூர் பாஷா மற்றும் போலீசார் நேற்று  இரவு கருவடிக்குப்பம் சிவாஜி சிலை அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

மேலும் மோட்டார் சைக்கிளுக்கான ஆவணங்களை கேட்டபோது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். அப்போது தான் அவர் ஓட்டி வந்தது திருட்டு மோட்டார் சைக்கிள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

பறிமுதல்

விசாரணையில் அவர், உருளையன்பேட்டை பெரியார் நகரை சேர்ந்த ருத்ரேஷ் மணி (வயது 26) என்பதும், தனது கூட்டாளிகளான கரியமாணிக்கத்தை சேர்ந்த அஜித்குமார் (28), சேதாரப்பேட்டை சேர்ந்த ஆனந்தன் (18) ஆகியோருடன் சேர்ந்து மோட்டார் சைக்கிள்களை திருடி வந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள், ஒரு ஸ்கூட்டர் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்