கணவன்- மனைவி உள்பட 3 பேர் கைது

வாடகை வீட்டில் அழகிகளை வைத்து விபசார தொழில் செய்த கணவன், மனைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2022-05-22 22:24 IST

புதுச்சேரி

வாடகை வீட்டில் அழகிகளை வைத்து விபசார தொழில் செய்த கணவன், மனைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

விபசாரம்

புதுசாரம் ஞானபிரகாசம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. அங்கு கடந்த சில நாட்களாக சந்தேகப்படும் வகையில் ஆண்களும், பெண்களும் வந்து சென்றனர்.

இதுபற்றி அக்கம்பக்கத்தினர் கோரிமேடு போலீசில் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் போலீசார் அந்த வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்தனர். அங்குள்ள அறைகளை சோதனை செய்தபோது பெண்களை வைத்து விபசாரம் நடப்பது தெரியவந்தது.

3 பேர் கைது

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், பாகூர் பகுதியை சேர்ந்த நாகப்பன் (வயது 39), அவரது மனைவி சர்மிளா (39) ஆகியோர் வாடகைக்கு வீடு பிடித்து அழகிகளை வைத்து விபசாரம் செய்ததும், அவர்களுக்கு புரோக்கராக நெல்லித்தோப்பை சேர்ந்த மாரியம்மாள் (52) செயல்பட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். விபசாரத்தில் ஈடுபட்ட 2 அழகிகள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்