கஞ்சா விற்ற ஓட்டல் ஊழியர் கைது

ஓட்டலில் வைத்து கஞ்சா விற்ற ஊழியரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2022-05-22 22:39 IST

புதுச்சேரி

லாஸ்பேட்டை கருவடிக்குப்பம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. உடனே சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையில் போலீசார் அங்கு சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்த கோவிந்தசாலையை சேர்ந்த ஓட்டல் ஊழியர் பிரான்சிஸ் சேவியர் (வயது 20) என்பவரை கையும் களவுமாக கைது செய்தனர். அவரிடமிருந்து 60 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்