3 பனை மரங்கள் எரிந்து நாசம்

திருக்கனூர் அருகே ஆற்றங்கரையோரத்தில் இருந்த 3 பனை மரங்களுக்கு தீ வைத்து எரித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update:2023-05-22 23:06 IST

திருக்கனூர்

திருக்கனூர் அருகே உள்ள கூனிச்சம்பட்டு சங்கராபரணி ஆற்றங்கரையோரத்தில் ஏராளமான பனைமரங்கள் உள்ளன. இங்கு தெற்கு கரையோரம் உள்ள பனைமரங்களுக்கு மர்மநபர்கள் யாரோ தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதில் 3 பனை மரங்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அங்கு பார்வையிட்டனர்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை நீர்ப்பாசன கோட்ட உட்பிரிவு உதவி பொறியாளர் மதிவாணன் கொடுத்த புகாரின்பேரில் திருக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பனை மரங்களுக்கு தீ வைத்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்