கஞ்சாவுடன் 3 பேர் கைது
கோட்டக்குப்பம் அருகே கஞ்சாவுடன் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;
வானூர்
புதுவையை அடுத்த கோட்டக்குப்பம் ரவுண்டானா பகுதியில் ஆரோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரராஜன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் கோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்த முகமது ரபீக் (வயது 22), லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த யுவராஜ் (24) என்பதும், விற்பனை செய்வதற்காக 250 கிராம் கஞ்சாவை கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கஞ்சாவையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் நடுக்குப்பம் பஸ்நிறுத்தம் அருகே கஞ்சா விற்றதாக கோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்த தேசமுத்து (23) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 110 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.