பள்ளி அருகே கஞ்சா விற்ற 3 பேர் கைது

அரியாங்குப்பத்தில் பள்ளி அருகே கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.;

Update:2022-11-18 23:09 IST

அரியாங்குப்பம்

அரியாங்குப்பத்தில் பள்ளி அருகே கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

கஞ்சா விற்பனை

அரியாங்குப்பம் மணவெளி தந்தை பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமையில் குற்றப்பிரிவு போலீசார் சிரஞ்சீவி, வேல்முருகன், உதயகுமார், ராஜேஷ் ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர்.

போலீசாரை கண்டதும் அங்கு நின்று கொண்டிருந்த 2 பேர் ஓட்டம் பிடித்தனர். சந்தேகம் அடைந்த போலீசார் 2 பேரையும் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் வில்லியனூர் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த பெயிண்டர் சூர்யா (வயது 22), வில்லியனூர் அடுத்த உருவையாறு பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி முருகன் (21) என்பதும், பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்றதும் தெரியவந்தது.

3 பேர் கைது

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா, ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்தது திருவண்ணாமலை அருகே உள்ள வீரபாண்டி பகுதியை சே்ாந்த தனஞ்செழியன் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்