பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது

பணம் வைத்து சூதாடிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2022-10-17 21:48 IST

புதுச்சேரி

புதுவை ஜீவானந்தபுரம் எம்.ஜி.ஆர். வீதியில் உள்ள ஒரு வீட்டில் பணம் வைத்து சூதாடுவதாக கோரிமேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று சூதாட்ட கும்பலை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் ரமேஷ் (வயது 37), சந்திரசேகரன் (35) சம்பத்ராஜ் (45), பிரபு (31), கதிரேசன் (52), சங்கர் (50), சிவா (56) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.20 ஆயிரம், சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்