பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது
திருபுவனை அருகே பணம் வைத்து சூதாடிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.;
திருபுவனை
திருபுவனை அருகே மதகடிப்பட்டு புதுநகர் கால்நடை ஆஸ்பத்திரி அருகே ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடுவதாக திருபுவனை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று சூதாடிக் கொண்டிருந்த கும்பலை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.விசாரணையில் அவர்கள், கலித்தீர்த்தாள்குப்பத்தை சேர்ந்த ஆனந்தன் (வயது 45), ராஜி (32), வீரமணி (40), ஜெயமணி (35), ஆறுமுகம் (30), கரையாம்புத்தூரை சேர்ந்த அய்யப்பன் (44) தமிழக பகுதியான மாத்தூரை சேர்ந்த பாஸ்கர் (47) என்பது தெரியவந்தது. இதையடுத்து 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்கள், ரூ.31 ஆயிரத்து 800 மற்றும் சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.