போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாவு

புதுவை முதலியார்பேட்டை இந்திராநகர் நேரு வீதியை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.;

Update:2023-03-12 23:14 IST

புதுச்சேரி

புதுவை முதலியார்பேட்டை இந்திராநகர் நேரு வீதியை சேர்ந்தவர் வடிவழகன் (வயது 54). இவர் பெரியகடை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் மேட்டுப்பாளையம் பகுதியில் சென்றார். அப்போது எதிரே வந்த ஆம்புலன்ஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியதில், வடிவழகன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

உடனடியாக அவர் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். நுரையீரல் பகுதியில் எலும்புகள் குத்தியிருந்ததால் மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். பின்னர் புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வடிவழகன் நேற்று உயிரிழந்தார். இது குறித்து கோரிமேடு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்