அழுகிய நிலையில் பிணமாக கிடந்த பொதுப்பணித்துறை என்ஜினீயர்

புதுவை பொதுப்பணித்துறையில் என்ஜினீயராக பணியாற்றி வந்தவர் பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.;

Update:2023-06-05 23:53 IST

புதுச்சேரி

புதுவை கொசப்பாளையம் கருணாகரபிள்ளை வீதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 58). புதுவை பொதுப்பணித்துறையில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகாததால் தனிமையில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக இவர் தங்கியிருந்த வீடு திறக்கவில்லை. இந்த நிலையில் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீச தொடங்கியது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் உருளையன்பேட்டை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அழுகிய நிலையில் ரமேஷ் பிணமாக கிடந்தார். அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்