மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் பலி
காரைக்காலில் மோட்டர் சைக்கிளில் சென்ற வாலிபர் கீழே விழுந்ததில் பலயியாகினார்.;
காரைக்கால்
திருவாரூர் மாவட்டம் பாவட்டக்குடி கீழத்தெருவை சேர்ந்தவர் விவேகானந்தன் (வயது31). வெல்டிங் தொழிலாளி. நேற்று இரவு வேலை தொடர்பாக காரைக்கால் வந்துவிட்டு, மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிகொண்டிருந்தார். நெடுங்காடு மேலகாசாகுடி சாலை, அம்பேத்கர்நகர் தனியார் திருமண மண்டபம் அருகே சென்றபோது, சாலையின் குறுக்காக திடீரென மாடு ஒன்று வந்துள்ளது. அதன் மீது மோதாமல் இருக்க விவேகானந்தன் உடனே பிரேக் போட்டார். அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து காரைக்கால் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.