காளான் வளர்ப்பு குறித்த பயிற்சி

காரைக்காலை அடுத்த மாதூர் வேளாண் அறிவியல் நிலையத்தில் காளான் வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம் நடந்தது;

Update:2023-05-24 22:43 IST

கோட்டுச்சேரி

காரைக்காலை அடுத்த மாதூர் வேளாண் அறிவியல் நிலையத்தில் காளான் வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம் நடந்தது. வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் ஜெயசங்கர் முகாமை தொடங்கி வைத்தார். வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுனர் திவ்யா காளான் வகைகள், தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார். மேலும் காளான் படுக்கை தயார் செய்யும் முறை செயல் விளக்கத்துடன் செய்து காண்பிக்கப்பட்டது.

இதில் மகளிர் சுய உதவிக்குழுவினர் பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்