தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி ஏற்பு

இந்திராகாந்தி பிறந்த நாளையொட்டி தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி ஏற்பு.;

Update:2022-11-19 22:27 IST

காரைக்கால்

புதுச்சேரி அரசு சார்பில், மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் பிறந்தநாள் விழா மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேசிய ஒருமைப்பாட்டு விழாவாக நடைபெற்றது. கலெக்டர் முகமது மன்சூர் தலைமை தாங்கினார். துணை ஆட்சியர் ஆதர்ஷ், போலீஸ் சூப்பிரண்டுகள் சுப்பிரமணியன், நிதின் கவுஹால் ரமேஷ், கல்வித்துறை அதிகாரி ராஜசேகரன், மேல்நிலைக்கல்வி துணை இயக்குனர் ராஜேஸ்வரி, நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு் இந்திராகாந்தி உருவப்படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செய்தனர். பின்னர், தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் விதமாக, மும்மத பிரார்த்தனை மற்றும் பாடல்கள் பாடப்பட்டது. பின்னர், மாவட்ட கலெக்டர் முகமது மன்சூர் முன்னிலையில் அனைவரும் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்