இரவு முழுவதும் செயல்படும் மதுபான விடுதிகளுக்கு தடை விதிக்க வேண்டும் - புதுச்சேரி அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் கோரிக்கை

இரவு முழுவதும் செயல்படும் மதுபான விடுதிகளால் அதிக குற்ற சம்பவங்கள் நடைபெறுவதாக அன்பழகன் குற்றம் சாட்டினார்.

Update: 2023-04-09 19:34 GMT

புதுச்சேரி,

புதுச்சேரியில் கலாச்சார சீர்கேடு ஏற்படுத்தும் இரவு நேர மதுபான விடுதிகளுக்கு அரசு தடை விதிக்க வேண்டும் என ஆளும் கூட்டணியில் புதுச்சேரி அ.தி.மு.க. செயலாளர் அன்பழகம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர், இரவு முழுவதும் செயல்படும் மதுபான விடுதிகளால் அதிக குற்ற சம்பவங்கள் நடைபெறுவதாக குற்றம் சாட்டினார். இந்த விவகாரத்தில் துணை நிலை கவர்னர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லாவிட்டால் அ.தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர் கூறினார்.


Full View


Tags:    

மேலும் செய்திகள்