அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ரூ.24 கோடி ஒதுக்கீடு

புதுவையில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க ரூ.24 கோடியை ஒதுக்கீடு செய்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-07-06 17:48 GMT

புதுச்சேரி

அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க ரூ.24 கோடியை ஒதுக்கீடு செய்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அரசு நிதியுதவி

புதுவை மாநிலத்தில் புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் என 4 பிராந்தியங்களிலும் அரசு நிதியுதவி பெறும் 35 தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு அரசு சார்பில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

அதாவது சம்பள பணத்தில் 95 சதவீதத்தை அரசு வழங்கி விடுகிறது. மீதமுள்ள 5 சதவீதத்தை நிர்வாகம் வழங்குகிறது. இவர்களுக்கான சம்பள தொகையை அரசு அவ்வப்போது விடுவித்து வருகிறது.

ரூ.24 கோடி ஒதுக்கீடு

அதன்படி கடந்த மார்ச் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான சம்பளத்துக்கு ரூ.24 கோடியே 15 லட்சத்து 51 ஆயிரத்து 500-ஐ ஒதுக்கி புதுவை கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு சம்பளம், ஓய்வூதிய பலன்கள் அளிக்கப்பட உள்ளன.

இந்த நிதியில் 2023-24-ம் ஆண்டுக்கு ஊழியர்களின் தொழில்வரியை பிடித்தம் செய்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு செலுத்துமாறும் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதற்கான உத்தரவை கல்வித்துறை சார்பு செயலாளர் வெர்பினோ ஜெயராஜ் வெளியிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்