அந்தோணியார் ஆலய தேர் பவனி
உருளையன்பேட்டையில் உள்ள அந்தோணியார் ஆலயத்தில் ஆடம்பர தேர் பவனி நடந்தது.;
புதுச்சேரி
புதுச்சேரி உருளையன்பேட்டையில் உள்ள அந்தோணியார் ஆலய திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் காலை 6.30 மணிக்கு பிரார்த்தனையும், மாலையில் நற்செய்தி, மறையுரையும் நடந்தது. முக்கிய விழாவான இன்று காலை 7 மணிக்கு சிறப்பு திருப்பலியும், பகல் 11 மணிக்கு ஜெபவழிபாடும் நடந்தது. மாலை 6.30 மணிக்கு ஆடம்பர தேர் பவனி நடந்தது. தொடர்ந்து நற்கருணை ஆசீரும் நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.