கோழி, காடை வளர்ப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோழி , காடை வளர்ப்புக்கு பட்டியல் இன இளைஞர்கள் மற்றும் விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Update: 2023-09-06 15:51 GMT

காரைக்கால்

காரைக்காலை அடுத்த மாதூர் வேளாண் அறிவியல் நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புறக்கடை கோழி வளர்ப்பு, காடை வளர்ப்பு, தீவனப்புல் வளர்ப்பு மற்றும் மீன் குஞ்சுகள் வளர்ப்பில் ஆர்வமுள்ள பட்டியல் இன இளைஞர்கள் மற்றும் விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. காரைக்கால் மாவட்ட மாதூர் வேளாண் அறிவியல் நிலையத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் நிதியுதவியுடன் அட்டவணை இனத்தினர் துணை நிலை திட்டத்தின் கீழ், ஆர்வமுள்ள அட்டவணை இனத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு கோழி மற்றும் காடை வளர்ப்பை ஊக்குவிக்கும் விதமாக, 50 எண்ணிக்கையிலான ஒரு மாத வயதுடைய நாட்டு கோழி குஞ்சுகள் மற்றும் 100 எண்ணிக்கையிலான ஒரு நாள் வயதுடைய காடை குஞ்சுகள் தலா 25 நபர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.

மேலும், அட்டவணை இனத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய பெண்களுக்கு தீவனப்புல், கெண்டை மீன் குஞ்சுகள் வழங்கப்படுகிறது. எனவே ஆர்வமுள்ள இளைஞர்கள் வேளாண் அறிவியல் நிலையத்தில் இருந்து அலுவலக நாட்களில் விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து வருகிற 15-ந் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை நகல், சாதி சான்றிதழ் நகலை இணைத்தல் வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்