பெண் மீது தாக்குதல்

பாகூரில் சொத்து தகராறில் பெண்ணை தாக்கியவாகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2023-03-18 20:16 IST

பாகூர்

பாகூர் அடுத்த மேல்பரிக்கல்பட்டு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் முத்துக்கண்ணு. அவரது மனைவி சாமுண்டீஸ்வரி (வயது 37). முத்துக்கண்ணுக்கும், அவருடைய தம்பி பாவாடைராயனுக்கும் சொத்து தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று பாவாடைராயன், தனது அண்ணன் வீட்டிற்கு சென்று தகராறு செய்தார். இதுகுறித்து சாமுண்டீஸ்வரி பாகூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதில் ஆத்திரம் அடைந்த பாவாடைராயன் தனது கூட்டாளிகள் மச்சகாந்தி, சுப்ரமணி, இந்திராணி, விக்கி ஆகியோருடன் சேர்ந்து சாமுண்டீஸ்வரியை தடியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் புதுவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின்பேரில் பாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்