பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்

நெட்டப்பாக்கம் அருகே பணத்தகராறில் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.;

Update:2023-01-27 23:10 IST

நெட்டப்பாக்கம்

நெட்டப்பாக்கம் அடுத்த பண்டசோழநல்லூர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராஜேஷ். இவருக்கும், ஏம்பலத்தை சேர்ந்த பத்மநாபனுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தின் மூலம் ராஜேஷ், பத்மநாபனுக்கு ரூ.6 லட்சம் கொடுத்தார். இந்த பணத்தை திருப்பி கொடுக்காததால் ராஜேஷ் மனைவி சரஸ்வதி (வயது 37), பத்மநாபனிடம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பத்மநாபனின் மனைவி ஜெயக்கொடி, அவரது மகள் ஜெயபாதுரி ஆகியோர் சரஸ்வதி வீட்டுக்கு சென்று, அவரை தரக்குறைவாக திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின்பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்