மூதாட்டி, பேத்தி மீது தாக்குதல்

காரைகாலில் இடதகராறில் முதாட்டி, பேத்தி மீது தாக்குதல் நடத்திய வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.;

Update:2022-05-20 20:05 IST

காரைக்கால்

காரைக்காலை அடுத்த நிரவி காக்கமொழி கிராமத்தை சேர்தவர் மீனாட்சி (வயது 70). இவர் தனது மகன் செந்தில்குமாருடன் வசித்து வருகிறார். இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த உறவினர் பாஸ்கர் (50) என்பவருக்கும் இடையே இடம்பிரச்சினை உள்ளது.

நேற்று மாலை மீனாட்சி தனது கொல்லையில் மாட்டை கட்டினார். அப்போது அங்கு வந்த பாஸ்கர், அரிவாளால் மாட்டின் கயிறை அறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இது பற்றி கேட்ட மீனாட்சியை, அவர் தாக்கி கீழே தள்ளிவிட்டார். இதை தடுக்க முயன்ற மீனாட்சியின் பேத்தி ஷாலினியும் தாக்கப்பட்டார். இதில் காயமடைந்த மூதாட்டி காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

Tags:    

மேலும் செய்திகள்