கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

புதுவையை அடுத்த சேதராப்பட்டு பகுதியில் பழமையான சுந்தரமூர்த்தி விநாயகர் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடு போயின.;

Update:2023-03-25 22:25 IST

காலாப்பட்டு

புதுவையை அடுத்த சேதராப்பட்டு பகுதியில் பழமையான சுந்தரமூர்த்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அரசூர் பகுதியை சேர்ந்த பூசாரி குமாரசாமி உள்ளார். நேற்று இரவு வழக்கம்போல் பூஜைகள் முடிந்து குமாரசாமி கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.

நேற்று காலை மீண்டும் கோவிலை திறக்க வந்தார். அப்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் கோவிலின் உள்ளே இருந்த உண்டியலும் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் கோவில் நிர்வாகி புருஷோத்தமனுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் அவர் உடனடியாக கோவிலுக்கு வந்து பார்வையிட்டார்.

இதுகுறித்து சேதராப்பட்டு போலீசில் புருஷோத்தமன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்