கஞ்சா விற்றவர் கைது

புதுச்சோியில் கஞ்சா விற்றவரை போலீசாா் கைது செய்தனர்.;

Update:2022-06-29 23:37 IST

மூலக்குளம்

முத்திரையர்பாளையம் கல்கி கோவில் அருகே மேட்டுப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 2 பேர், போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் 2 பேரையும் பிடிக்க முயன்றனர். இதில் ஒருவர் மாட்டிக் கொண்டார். மற்றொருவர் தப்பியோடி விட்டார்.

விசாரணையில் பிடிபட்டவர், புளியஞ்சோலை பகுதியை சேர்ந்த கேசவன் (வயது 31) என்பதும், தப்பியோடிவர் தர்மாபுரியை சேர்ந்த பாண்லே நிறுவனத்தில் டிரைவராக பணிபுரியும் கார்த்தி (30) என்பதும தெரியவந்தது., 2 பேரும் சேர்ந்து கஞ்சா விற்றதும் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்துள்ளனர். இதையடுத்து கேசவனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 125 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் வில்லியனூர் பகுதியில் கஞ்சா விற்றதாக உத்தரபிரதேசத்தை சேர்ந்த அனில்குமார் (45) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்