சவுக்குதோப்பில் இறந்து கிடந்த தச்சு தொழிலாளி

அரியாங்குப்பம் அருகே சவுக்குதோப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்த தச்சு தொழிலாளி குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2023-09-25 23:22 IST

அரியாங்குப்பம்

அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினம் யோகலட்சுமி நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 54). தச்சுத்தொழிலாளி. அவரது மனைவி அலமேலு. முருகனுக்கு வலிப்பு நோய் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் முருகன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். நேற்று முருகன் வீட்டில் சாப்பிட்டு விட்டு வீராம்பட்டினம் கடற்கரைக்கு சென்றுள்ளார்.

பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அவரை தேடி சென்றனர். அப்போது அங்குள்ள சவுக்கு தோப்பில் முருகன் மர்மமான முறையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அரியாங்குப்பம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் வலிப்பு நோய் ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்