கைதானவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நீதிமன்ற காவலில் விசாரணை

ரூ.45.5 லட்சம் மோசடி வழக்கில் கைதானவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நீதிமன்ற காவலில் விசாரணை நடத்தினார்கள்;

Update:2022-11-03 23:46 IST

புதுச்சேரி

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி புதுவையை சேர்ந்தவர்களிடம் ரூ.45.5 லட்சம் மோசடி செய்ததாக தஞ்சாவூரை சேர்ந்த தாய், மகனான நாகம்மை, பிரபாகரன் ஆகியோரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேடி வந்தனர். அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டனர். பிரபாகரனிடம் இருந்து ரூ.5 லட்சம் ரொக்கம், லேப்டாப், 10 செல் போன்கள், போலி முத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தநிலையில் பிரபாகரனை நீதிமன்ற காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்