அரசு அலுவலகங்களில் முதல்-அமைச்சர் ரங்கசாமி படம்
புதுவை அரசு அலுவலகங்களில் முதல்-அமைச்சர் ரங்கசாமியின் படத்தை வைக்க கலெக்டர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.;
புதுச்சேரி
புதுவை அரசு அலுவலகங்களில் முதல்-அமைச்சர் ரங்கசாமியின் படம் வைக்கப்படுவதில்லை. இதை எம்.எல்.ஏ.க்கள் பலரும் சட்ட சபையில் அரசின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.
இதைத்தொடர்ந்து புதுவை அரசு அலுவலகங்களில் முதல்-அமைச்சர் ரங்கசாமியின் படத்தை வைக்க கலெக்டரும், செய்தி மற்றும் விளம்பரத்துறை செயலாளருமான வல்லவன் உத்தர விட்டுள்ளார். இது தொடர்பாக அனைத்து துறைகளுக்கும் அவர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.