அரசு பள்ளிகளில் கலெக்டர் திடீர் ஆய்வு

காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் அரசு பள்ளகளில் இன்று திடீர் ஆய்வு செய்தார்.;

Update:2023-09-20 22:24 IST

காரைக்கால்

காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் ,இன்று அக்கரைவட்டம் அரசு உயர்நிலைப்பள்ளி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி உள்ளதா? கழிவறை வசதி போதுமானதாக இருக்கிறதா? என்பது குறித்து ஆய்வு செய்தார்.

மேலும் பள்ளியில் மதிய உணவு சாப்பிடும் மாணவர்களிடம், உணவு ருசியாக இருக்கிறதா? போதுமான அளவு வழங்கப்படுகிறதா? என்றும் கேட்டறிந்தார். பின்னர் 10-ம் வகுப்பு மாணவர்களிடம் கல்வி தொடர்பாக கலந்துரையாடினார்.

இதன்பின் காரைக்கால் முருகாத்தாள் ஆச்சி பள்ளியில் ஆய்வு செய்த கலெக்டர், மாணவர்களுக்கு தரமான உணவு வழங்கவேண்டும். வகுப்பறைகள் மற்றும் கழிவறைகளை சுத்தமாக பராமரிக்கவேண்டும். மாணவிகளுக்கு தேவையான குடிநீர் வசதிகளை செய்துதரவேண்டும் என ஆசிரியர்களிடம் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது பள்ளி துணை முதல்வர் குமாரசிவம், தலைமை ஆசிரியர் முத்துசெல்வம் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்