கேந்திர வித்யாலயா பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு

கோட்டுச்சேரியில் கேந்திர வித்யாலயா பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார்.;

Update:2023-07-10 23:44 IST

கோட்டுச்சேரி

நிரவி பகுதியில் மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் கேந்திர வித்யாலயா பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். வகுப்பறைகளை பார்வையிட்ட கலெக்டர், பள்ளியில் உள்ள அடிப்படை வசதிகள் சம்பந்தமாக ஏதேனும் குறைகள் உள்ளதா என்று மாணவர்களிடம் கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து பள்ளி வளாகத்தை பார்வையிட்ட அவர், மாணவர்கள் பயன்படுத்தும் பகுதிகளில் சுகாதாரத்தை பேணி காக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்