மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 பேர் படுகாயம்

திருபுவனை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.;

Update:2022-05-29 22:29 IST

திருபுவனை

திருபுவனை அருகே மதகடிப்பட்டு புதுநகர் குறிஞ்சி வீதியை சேர்ந்த சீனிவாசன் மகன் கோகுல் (வயது 20). இவர் தனது நண்பர் பிரவீனுடன் மோட்டார் சைக்கிளில் புதுச்சேரி- விழுப்புரம் சாலையில் மதகடிப்பட்டு பகுதியில் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தவர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார். விபத்து குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்