செல்போன் கடையில் வணிகவரித்துறை அதிகாரிகள் சோதனை
காைரக்கால் செல்ேபான் கடையில் வணிகவரித்துறையினர் 6 மணி நேரம் சோதனையில் ஈடுபட்டனர்.;
காரைக்கால்
காரைக்கால்-திருநள்ளாறு சாலையில் பிரபல செல்போன் கடை இயங்கி வருகிறது. இந்த செல்போன் கடைக்கு தமிழகத்திலும் பல்வேறு பகுதிகளில் கிளைகள் உள்ளன. இந்த நிலையில் இந்த செல்போன் கடையில் உரிய கணக்கு மற்றும் வரி செலுத்தாமல் செல்போன்களை விற்பதாகவும், மற்ற கடைகளை விட விலை குறைவாக வழங்குவதாகவும் புகார் எழுந்தது.
இதைத்தொடர்ந்து இன்று பிற்பகல் புதுச்சேரி வணிகவரித்துறை அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழுவினர், கடையில் திடீரென அதிரடியாக நுழைந்து சோதனை மேற்கொண்டனர். சுமார் 6 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த இந்த சோதனையில் கணக்கில் வராத செல்போன்கள் மற்றும் ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.