மதுக்கடையில் இருதரப்பினர் மோதல்

திருக்கனூர் அருகே மதுக்கடையில் இருதரப்பினர் மோதிக்கொண்ட தகராறில் போலீசார் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.;

Update:2023-05-23 22:47 IST

திருக்கனூர்

திருக்கனூர் அருகே உள்ள கைக்கிலப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அபிராமன் (வயது 30). கூலி தொழிலாளி. இவர் கே.ஆர்.பாளையத்தில் உள்ள ஒரு மதுக்கடையில் தனது நண்பர்கள் ராமு, ரவி, ராஜன் ஆகியோருடன் மது கடித்துவிட்டு, வெளியே நின்று பேசிக்கொண்டு இருந்தார். அப்போது மதுக்கடை வெளியே இருந்த வாதானூரை சேர்ந்த செல்வகுமார், தமிழரசன், மணிகண்டன் ஆகியோர், அபிராமன் தரப்பினரிடம் தகராறு செய்தனர். சற்று நேரத்தில் தகராறு முற்றிய நிலையில், இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் திட்டி, உருட்டுகட்டையால் தாக்கிக்கொண்டனர்.

இது குறித்து இருதரப்பினர் தனித்தனியே திருக்கனூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் செல்வக்குமார் மற்றும் அபிராமன் தரப்பை சேர்ந்த 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்