புதுச்சேரி
புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தொகுதி வாரியாக ஊர்வலம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக உருளையன்பேட்டை வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஊர்வலம் நேற்று மாலை நடந்தது. காந்திவீதியில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலத்துக்கு உருளையன்பேட்டை வட்டார காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். இதில் புதுவை மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. ஆனந்தராமன், துணை தலைவர் தேவதாஸ், மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு, நிர்வாகிகள் வேல்முருகன், பாபுலால் மற்றும் இளைஞரணி, மகளிரணி, மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
இந்த ஊர்வலம் புஸ்சி வீதி, பாரதி வீதி, அண்ணா சாலை, காமராஜர் சாலை வழியாக தந்தை பெரியார் சிலை அருகே நிறைவடைந்தது. தொடர்ந்து அங்கு ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.