மேலும் 42 பேருக்கு கொரோனா
புதுவையில் புதிதாக 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள்து.;
புதுச்சேரி
புதுவையில் இன்று காலை 10 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 1,271 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 42 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 4 பேர் மருத்துவமனைகளிலும், 234 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன்மூலம் 238 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 20 பேர் குணமடைந்துள்ளனர்.
புதுவையில் கொரோனா பாதிப்பு 1.18 சதவீதமாக உள்ளது. நேற்று 628 பேர் முதல் தவணை தடுப்பூசியையும், 2 ஆயிரத்து 919 பேர் 2-வது தவணை தடுப்பூசியையும், 961 பேர் பூஸ்டர் தடுப்பூசியையும் போட்டுக்கொண்டனர். புதுவையில் இதுவரை 17 லட்சத்து 39 ஆயிரத்து 664 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.