கொரோனா தடுப்பூசி முகாம்
வில்லியனூரில் கொரோனா தடுப்பூசி முகாமை சிவா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.;
வில்லியனூர்
புதுவை அரசு சுகாதாரத்துறை சார்பில் இன்று மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. வில்லியனூர் தொகுதி இமாகுலேட் பள்ளியில் நடந்த முகாமை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி சுவாதி, தி.மு.க. தொகுதி செயலாளர் ராமசாமி, மாநில விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் செல்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.