கடனுக்கு மதுபானம் தராத காசாளருக்கு கத்தி வெட்டு

ரெட்டியார்பாளையத்தில் கடனுக்கு மதுபானம் தராத காசாளர்க்கு கத்தி குத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்கள்.;

Update:2022-05-23 22:54 IST

புதுச்சேரி

ரெட்டியார்பாளையம் மரியாள் நகரை சேர்ந்தவர் ராஜா (வயது 62). இவர் புதுவை திருவள்ளுவர் சாலையில் உள்ள மதுக்கடையில் கேஷியராக (காசாளர்) பணிபுரிந்து வருகிறார்.

நேற்று மதுக்கடையில் இருந்தபோது பிள்ளைத்தோட்டம் பள்ளத்தெருவை சேர்ந்த சந்திரசேகர் (39) என்பவர் கடைக்கு வந்து கடனுக்கு மதுபானம் கேட்டுள்ளார். ஆனால் ராஜா தர மறுத்துவிட்டார்.

இதனால் அவருடன் தகராறில் ஈடுபட்ட சந்திரசேகர் கத்தியால் வெட்டினார். இதில் ராஜாவுக்கு இடதுபக்க புருவம் அருகே வெட்டுக்காயம் விழுந்தது. உடனே அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

இது தொடர்பான புகாரின்பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்