முதியவர் தற்கொலை
நெட்டப்பாக்கம் அருகே முதியவர் வயிற்று வலீ காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
நெட்டப்பாக்கம்
புதுவை மாநிலம் நெட்டப்பாக்கம் அருகே உள்ள பண்டசோழநல்லூர் சப்தகிரி நகர் பகுதி சேர்ந்தவர் ஆறுமுகம் (58). தனியார் பஸ்சில் கண்டக்டராக பணிபுரிந்து தற்போது வேலைக்கு செல்லாததால் மது பழக்கத்திற்கு அடிமையானார். தொடர்ந்து மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் வயிற்று வலி காரணமாக இன்று வீட்டின் வராண்டாவில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து நெட்டப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.