மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணம்
புதுவையில் சமூக நலத்துறை சார்பில் உப்பளம் தொகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.;
புதுச்சேரி
புதுச்சேரி அரசு சமூக நலத்துறை சார்பில் உப்பளம் தொகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சக்கர நாற்காலி, கை, கால் ஊன்றுகோல், காது கேட்கும் கருவிகள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. தொகுதி அவைத்தலைவர் ரவி, செயலாளர் சக்திவேல், ஆதிதிராவிடர் துணை அமைப்பாளர் ராஜி உள்பட பலர் கலந்துகொண்டனர்.