முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் விளக்கம்
காரைக்கால் மாணவன் பலியான சம்பவத்தில் அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் விளக்கம் அளிக்கப்பட்டது.;
புதுச்சேரி
முதல்-அமைச்சர் ரங்கசாமியை சுகாதாரத்துறை செயலாளர் உதயகுமார், இயக்குனர் ஸ்ரீராமுலு ஆகியோர் சந்தித்து பேசினார்கள். அப்போது காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் மாணவன் பால மணிகண்டனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விளக்கினர். அவனது உயிரை காக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் காலியாக உள்ள பணியிடங்கள், சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள் குறித்தும் தெரிவித்தனர்.
பணியிடங்களை நிரப்பவும், உபகரணங்கள் வாங்கவும் முதல்-அமைச்சர் ரங்கசாமி கேட்டுக்கொண்டார்.
புதுவையில் காய்ச்சல் அதிக அளவில் பரவி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவ முகாம்களை நடத்தவும் கேட்டுக்கொண்டார். வேறு ஏதேனும் வகையான காய்ச்சல் பரவி உள்ளதா? என்பதை கண்டறிய சளி மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்புமாறும் உத்தரவிட்டார்.