தூக்குப்போட்டு பெண் தற்கொலை
பாகூர் அடுத்த குருவிநத்தம் பகுதியில் குழந்தை இல்லாத காரணத்தினால் மனமுடைந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
பாகூர்
பாகூர் அடுத்த குருவிநத்தம் பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்டாலின் (வயது 36). அவரது மனைவி ஜெயந்தி (32). இவர்கள் பாகூர் தாமரைக்குளம் வீதியில் வசித்து வந்தனர். திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆகியும் இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட ஜெயந்தி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாகூர் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.