இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
மாமியார் திட்டியதால் மனவேதனை அடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
பாகூர்
கிருமாம்பாக்கம் அடுத்துள்ள கன்னியக்கோவில் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 32). இவர் சோரியாங்குப்பத்தில் உள்ள தனியார் மதுபான பாரில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நெய்வேலியை சேர்ந்த உறவினரான மதிவதனி (22) என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 வயதில் ஜெயவேல் என்ற ஆண் குழந்தை உள்ளது.
நேற்று இரவு வினோத்குமாரின் தாய் வேல்விழி, எனது மகனுக்கு உடல்நிலை சரியில்லை. அதற்கு, நீ அவனை சரியாக கவனித்து கொள்ளவில்லை என மதிவதனியிடம் கூறியுள்ளார். இதனால், அவர் மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று காலை வழக்கம் போல் வினோத்குமார் வேலைக்கு சென்று விட்டார். மதியம் 12.30 மணியளவில், வினோத்குமாரின் சித்தி மாரியம்மன், அவருக்கு போன் செய்து மதிவதனி, தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்தார். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், பதறியடித்து வீட்டுக்கு வந்து மனைவியின் உடலைபார்த்து கண்ணீர்விட்டு கதறிஅழுதார். இது பரிதாபமாக இருந்தது.
மதிவதனி தற்கொலை செய்துகொண்டது குறித்து கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.