விமான நிலைய சாலையில் கோலப்போட்டி

புதுவை உழவர்கரை நகராட்சி சார்பில் தூய்மை சேவை மற்றும் இருவார தீவிர தூய்மைப்பணியை முன்னிட்டு விமான நிலைய சாலையில் கோலப்போட்டி நடைபெற்றது.;

Update:2023-09-25 23:33 IST

புதுச்சேரி

மத்திய அரசின் அறிவுறுத்தல் படியும், புதுவை அரசின் உள்ளாட்சித்துறை வழிகாட்டுதல் படியும் உழவர்கரை நகராட்சி சார்பில் தூய்மை சேவை மற்றும் இருவார தீவிர தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக விமானநிலைய சாலையில் பெண்களுக்கான கோலப்போட்டி நடந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு கோலமிட்டனர். முதல் 3 இடங்களை பிடித்த கோலங்களுக்கு முறையே ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் ரொக்கப் பரிசை உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்