அரசு பள்ளி மாணவர்கள் டெங்கு விழிப்புணர்வு பேரணி

பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சார்பில் அரசு பள்ளி மாணவர்கள் டெங்கு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

Update: 2023-07-29 17:20 GMT

பாகூர்

பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சார்பில் பரிக்கல்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்க கூட்டம் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக அரசு ஆரம்ப சுகாதார நிலைய முதன்மை மருத்துவ அதிகாரி ஆனந்தவேலு கலந்து கொண்டு கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியின் போது மாணவர்கள் முக்கிய வீதிகள் வழியாக டெங்கு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும், விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் துண்டு பிரசுரங்களும் விநியோகித்தனர். முன்னதாக கீழ்பரிக்கல்பட்டு துணை ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவர்கள் மலர்மன்னன், தமிழ்மாறன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பள்ளி தலைமை ஆசிரியர் ராமலிங்கம் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் மாணவர்களுக்கு டெங்கு நோய் பற்றியும், அதன் அறிகுறிகள் மற்றும் தடுக்கும் முறைகளை சுகாதார ஆய்வாளர்கள் புகழேந்தி, செல்வம், வேலு, வீர முனீஸ்வரி ஆகியோர் விரிவாக எடுத்துரைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்