அரசு ஐ.டி.ஐ. மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை

புதுவை மேட்டுப்பாளையம் அரசு ஐ.டி.ஐ. மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது.;

Update:2023-07-20 23:30 IST

புதுச்சேரி

புதுவை மேட்டுப்பாளையம் அரசு ஆண்கள் ஐ.டி.ஐ.யில் காலியாக உள்ள பிட்டர், எலக்ட்ரீசியன், மோட்டார் வாகன மெக்கானிக், கம்ப்யூட்டர், ஆபரேட்டர், வயர்மேன், வெல்டர், மின்சார வாகன மெக்கானிக் உள்ளிட்ட தொழிற்பயிற்சி பிரிவுகளுக்கு உடனடி மாணவர் சேர்க்கை இன்று தொடங்கியது. இந்தநிலையில் மேட்டுப்பாளையம் அரசு ஐ.டி.ஐ.யில் காலியாக உள்ள இடங்களில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டினர். மாணவர்களுக்கான சேர்க்கை ஆணையை கல்லூரியின் முதல்வர் அழகானந்தன் வழங்கினார். நிகழ்ச்சியில் திருவேங்கடன், ஆசிரியர்கள் அய்யனார், முருகன் மற்றும் பலர் உடனிருந்தனர். இந்த மாணவர் சேர்க்கை வருகிற 28-ந் தேதி வரை நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்