கைத்தறி ஆடைகள் கண்காட்சி

காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் கைத்தறி ஆடைகள் கண்காட்சி நடக்கிறது;

Update:2023-02-01 23:55 IST

காரைக்கால்

காஞ்சீபுரத்தில் உள்ள மத்திய அரசு ஜவுளி அமைச்சகம் கைத்தறி அபிவிருத்தி ஆணைய அலுவலகம், நெசவாளர் சேவை மையம் சார்பில் காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் கைத்தறி ஆடைகள் கண்காட்சி நடக்கிறது.

கண்காட்சியை புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா இன்று குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. நாஜீம், துணை மாவட்ட கலெக்டர் ஆதர்ஷ், ஜவுளித்துறை துணை இயக்குனர் சசிகலா மற்றும் பலர் கலந்துகொண்டனர். இந்த கண்காட்சி வருகிற 7-ந் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்