தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
காரைக்காலில் மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த வீட்டின் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.;
காரைக்கால்
காரைக்காலை அடுத்த திரு-பட்டினத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 46). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரது மனைவி ஷீலா தனியார் ஜவுளிக்கடையில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மது குடித்துவிட்டு சிவக்குமார் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்துவந்தார். இதுபற்றி கேட்டபோது, கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஷீலா கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த சிவக்குமார், வீட்டின் பின்பக்கம் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
இது குறித்து திரு-பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.