தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

புதுச்சேரியில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.;

Update:2022-09-30 21:49 IST

பாகூர்

கடலூர் அருகே திருப்பனாம்பாக்கத்தை சேர்ந்தவர் தேசிங்கு (வயது 60). இவர் பாகூர் கிழக்கு வீதியில் உள்ள தம்புசாமி என்பவரின் தோட்டத்தில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். வேலை முடிந்ததும் அவர் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவாராம். எனவே அவரை வேலைக்கு செல்லவேண்டாம் என்று அவரது குடும்பத்தினர் வலியுறுத்தினர். இதனால் அவர் மனவேதனையில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் தேசிங்கு, தான் வேலை செய்யும் தோட்டத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்த பாகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தேசிங்கு உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்