தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2022-10-13 23:18 IST

அரியாங்குப்பம் 

அரியாங்குப்பம் அடுத்த காக்காயந்தோப்பு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஜவாலுதீன் (வயது 50). டீக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அவரது மனைவி நபிஷாபேகம். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ஜவாலுதீனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மனமுடைந்து காணப்பட்ட ஜவாலுதீன் வீட்டின் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்