வீடு புகுந்து 4 பவுன் நகை திருட்டு

கோட்டுச்சேரியில் வீடு புகுந்து 4 பவுன் நகை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனா்.;

Update:2022-08-19 22:44 IST

கோட்டுச்சேரி

காரைக்காலை அடுத்த நிரவி ரோஜா நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் தமிழகத்தில் உள்ள ஒரு சிமெண்டு கடையில் காசாளராக வேலை செய்து வருகிறார். கடந்த 14-ந்தேதி, தனது குடும்பத்துடன் புதுச்சேரியில் உள்ள உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, நேற்று வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கபட்டு கதவு திறந்து கிடந்தது. மேலும், படுக்கையறையில் இருந்த அலமாரி உடைக்கப்பட்டு, அதில் இருந்த 4 பவுன் நகை திருட்டுபோய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் நிரவி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்ம ஆசாமிகள் குறித்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்