ஆள்கடத்தல் முயற்சி வழக்கில்7 பேர் விடுதலை

புதுச்சேரியில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு ஆள்கடத்தல் முயற்சி வழக்கில் 7 பேரை விடுதலை செய்து புதுச்சேரி கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-07-17 18:25 GMT

புதுச்சேரி

புதுச்சேரியில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு ஆள்கடத்தல் முயற்சி வழக்கில் 7 பேரை விடுதலை செய்து புதுச்சேரி கோர்ட்டு உத்தரவிட்டது.

ஆள்கடத்தல்

சேலம் இலங்கை அகதிகள் முகாமில் இருந்த அகதிகள் 50 பேரை புதுச்சேரியில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கடல் வழியாக கடந்த 2010-ம் ஆண்டு ஆள்கடத்தல் முயற்சி நடந்தது.

இதுகுறித்து புதுவை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 10.7.2010-ம் ஆண்டு கண்ணன், சக்திவேல், லோகு அய்யப்பன், ஜீவா, செல்வகுமார், தேவமணி, கலியமூர்த்தி, சங்கர், பாலகுரு, ராஜேந்திரன், யோகநாதன் ஆகிய 11 மீது வழக்குப்பதிவு செய்தது.

7 பேர் விடுதலை

இந்த வழக்கில் தேவமணி உயிரிழந்ததால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். மேலும் செல்வகுமார், ராஜேந்திரன், யோகநாதன் ஆகியோர் தலைமறைவாக இருப்பதால் 3 பேர் மீதும் தனிவழக்காக விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கு புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி மோகன் முன்னிலையில் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று இறுதி விசாரணை நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து. சரிவர குற்றம் நிரூபிக்கப்படாததால் கண்ணன், சக்திவேல், லோகுஅய்யப்பன், ஜீவா, கலியமூர்த்தி, சங்கர், பாலகுரு ஆகிய 7 பேரை விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்