ஜெயின் சமூகத்தினர் ஊர்வலம்
புதுவையில் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஜெயின் சமூகத்தினர் ஊர்வலம் சென்றனர்.;
புதுச்சேரி
மகாவீர் ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி புதுவை அண்ணா சாலையில் உள்ள ஜெயின் கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் மகாவீரர் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.அண்ணா சாலை, வள்ளலார் சாலை, காமராஜர் சாலை, பாரதி வீதி வழியாக மீண்டும் ஜெயின் கோவிலை வந்தடைந்தது. ஊர்வலத்தில் சென்றவர்கள் மகாவீரரின் போதனைகளை உச்சரித்தபடி ஆடிப்பாடி சென்றனர்.
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இறைச்சி கடைகளை மூட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டிருந்தது. இதன்படி பெரிய மார்க்கெட், சின்ன மார்க்கெட் என நகராட்சி வசம் உள்ள மார்க்கெட்டுகளில் இறைச்சி, மீன் கடைகள் மூடப்பட்டு இருந்தன.
ஆனால் தனியார் இடங்கள் மற்றும் சாலையோர கடைகளில் இறைச்சி, மீன் விற்பனை வழக்கம்போல் நடந்தது.