அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை
அரியாங்குப்பத்தில் உள்ள அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை நடந்தது.;
அரியாங்குப்பம்
அரியாங்குப்பத்தில் உள்ள அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை நடந்தது. விழாவில் அம்பலத்தில் அய்யப்ப சாமிக்கும், 18 படிகளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ பூஜைகள் நடந்தது. மூத்த குருசாமி செல்வம் தலைமையில் பக்தர்கள் பஜனைகள் நடத்தினார்கள். மகா தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து 300-க்கும் மேற்பட்டோருக்கு சமபந்தி விருந்து வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அய்யப்பன் கோவில் அறங்காவல் குழு, அய்யப்ப சேவா சங்கம் செய்திருந்தது.